இருத்தலின் நிலைப்பாடு
இருத்தலின் நிலைப்பாடு
ஒன்றையொன்று விலகி
ஓடுகிறது என் தனிமையில்
புரிந்து கொள்வதற்கு
அறியாமை மட்டுமே
எஞ்சி இருக்கிறது ..
இந்த இரவை எப்படியாவது
கடந்தாக வேண்டும்
அதற்கான ஒப்புதல்
இன்னுமும்
வழங்கப்படவில்லை
எனக்கு ..
எப்படியும் நேரம்
கடந்து போகும்
என்ற ஆறுதல்
நினைவை
ஆக்கிரமித்தாலும்
கரும்பொருளில்
விழுந்த நிலையாக
தோற்றமளிக்கிறது ..
எழுதும் நேரத்தில்
மட்டுமே ஆறுதல்
அடைகின்ற மோகம்
வந்து விட்டது இதற்கு
அர்த்தம் இல்லையென்றாலும்
அதுவே நம்பும்
காரணியாகிறது..
தி .ராஜேஷ் .
Comments
Post a Comment