அனுமானங்களின் மிச்சங்கள்

அன்பின் முனைப்பில்
தொடர்ந்து எழும்
கேள்விகளுக்கு வாய்ப்புகள்
நிர்பந்திக்கப்படும் தருணத்தில்
உளறி கொட்டி விடுகிறது
மனது புண்படும் வார்த்தைகள் ...

வலிகளில் நிரம்பி உள்ள
வார்தைகளை கோர்வையாக
சொல்லப்படுகிறது ...

கொஞ்சமேனும் கோபம்
வந்து விட்டால் போதும்
அந்நிமிடம் அச்சம்
என்னை சூழ்ந்துவிடுகிறது ...

உலர்ந்து போன கண்களுக்கு
புன்னகையின் பதிலே
எதிர்பார்க்கிறது ...

அனுமானங்களுக்கு ஒன்றும்
அளவில்லாமல் செல்கிறது
நிறைவேறாத எண்ணங்களுடன் ..

                                        -தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

பிரபஞ்ச கருவின் உயிர்தெழுதல்