வளத்தூர் சரோஜாம்மா பேரன் ராஜேஷ் இரு வாரம் முன்பு வன்மம் தீண்டிய ஒரு நாளில் இறந்தான் . முதலில் மகா பின்பு தான் ராஜேஷ் இறந்தான் . எதனையும் கேட்பதற்கு யாருமற்ற நிலையில் இறந்து கிடந்தோம் . எங்கள் மரணத்திற்கு நாங்களே அழுது தீர்த்தோம் . இறந்தவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருக்க அவரவரின் கைகளைக் கொண்டே துயர் நீக்கி கொண்டிருந்தோம். -வளத்தூர் தி. ராஜேஷ்.
இதோ திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கடந்து விட்டது .எங்கும் எதிலும் அன்பினை விதைத்துச் சென்றுகொண்டிருக்கிறது காலம் . இல்லறத்தின் புரிதல்களில் நம் அன்பு மிகைப்படுத்தப்படுகிறது . உனக்காகவே எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் சொற்களில் உணர்தல் அனைத்துமே உனதாகவே கொண்டிருக்கிறது . அத்தனை நிறைவையும் கொண்டிருக்கிறது யாவும் . சில ஊடல்களில் நம் நினைவினை ஆங்காங்கே தனித்திருக்கிறது வெளி . வாழ்வு இன்பத்தையும் துன்பத்தையும் அனைத்தின் பக்கமும் கொண்டிருக்கிறது . ஒரு தீராத வலியினை நம் மீது செலுத்தி விட்டு சென்று விட்டது பெருவெளி .நம் மூன்று மாத உயிர் கரு நாம் இழந்திருந்த பொழுது நம் அன்பே நம்மை மீட்டுக் கொண்டிருக்கிறது . பிரபஞ்ச நிழலில் உறங்கிக்கொண்டிருந்தது தன் உணர்தலின் கனவு . விழித்தெழும் கனவில் பிரபஞ்ச ஒளி தூது கொண்டு வந்திருக்கிறது . தன் தொன்மையின் தொடர்ச்சியை எத்தனை எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது இந்தப் பிரபஞ்ச நகர்தல் என்று . நம் இருப்பின் அமைவு பிரபஞ்சத்தின் முதல் வருகையை உறுதிப்படுத்துகிறது . ---------------------------------------- ஆதியின் ஒளியை வழிபட்டுக் கொண்டிருக்க